2.2.11

உயிரின் வளர்ச்சிப் படிநிலைகள்




உயிரின் வளர்ச்சிப் படிநிலைகளைத் தமிழ் இலக்கணம் ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கூறுகிறது.

  1. ஓரறிவுயிர் – தொடு உணர்வை அறிதல், உடலை மட்டும் கொண்டது.  (மரம், செடி, கொடி போன்றன)
  2. ஈரறிவுயிர் – தொடு உணர்வுடன் சுவையுணர்வை அறியும் வாயையும் கொண்டது.  (மண்புழு போன்றவை)
  3. மூவறிவுயிர் – தொடுவுணர்வு, சுவையுணர்வுடன் நுகர்வுணர்வை அறியும் மூக்கையும் கொண்டது.  (எறும்பு, சிதல் போன்றவை)
  4. நாலறிவுயிர் – மூவறிவுடன் காட்சியை அறியும் கண்களையும் கொண்டது.  (நண்டு, தும்பி போன்றவை)
  5. ஐந்தறிவுயிர் – நாலறிவுடன் கேள்வியை அறியும் செவிகளையும் கொண்டது.  (விலங்குகள், பறவைகள் போன்றவை)
  6. ஆறறிவுயிர் – ஐந்தறிவுடன் ஆறாவதாகிய பகுத்தறிவையும் கொண்டது.  (மனிதர்கள்)



மேலே கூறப்பட்டுள்ளவற்றில் இருந்து தமிழ் இலக்கணம் உயிரினங்களை ஆறுவகைகளாகப் பிரித்து ஆராய்ந்துள்ளமை தெரிகிறது.  
  


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment