10.2.11

நிறவெறியும் இன அழிப்பும்



வெள்ளை நிற வெறியே, ஆரிய இன வெறியாக உலகில் பரவி, வெள்ளை நிறமல்லாத தமிழ் இன அழிப்புக்குத் துணையாக அமைந்துள்ள கொடுமை நடைபெற்றுள்ளது.

தடை ஏன்?

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், தமிழ் இன அழிப்புக்கு எதிராகச் செயல்படவில்லையே தவிர தமிழ் இன அழிப்புக்குத் துணையாகச் செயல்பட்டார்கள் என்பது எவ்வாறு பொருந்தும்? என்னும் கேள்வி எழலாம்.



விடுதலைப்புலிகள், இலங்கையில் சிங்களர்களின் கொடுமைகளிலிருந்து தமிழ் இனத்தை விடுவிக்கும் விடுதலைப் போராளிகளாகச் செயல்பட்டார்களே தவிர, மேலே கூறப்பட்ட நாடுகளில் அழிவை விளைவிக்கும் பயங்கரவாதிகளாகச் செயல்படாமல் இருந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பை இந்த நாடுகளில் தடை செய்தமை எந்த வகையில் நியாயம்?  என்னும் கேள்விக்கு அவர்களிடத்தில் விடை இல்லை.  ஏனெனில், விடுதலைப்புலிகள் அந்த நாடுகளில் எந்த அழிவு வேலையையும் செய்யவில்லை என்பது உலகறிந்த உண்மை.  அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைத் தடை செய்யக் காரணம், நிறவெறிக் கொள்கையையுடைய இந்தோ ஐரோப்பியர் (Indo Europeans) எனப்படும் பிராமணர்களின் தமிழ் இன அழிப்புக் கொள்கைக்குத் துணை போனமையே ஆகும். 



வெள்ளையரல்லாத இனங்களை அழிப்பது என்பது ஐரோப்பியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்பதை உலக வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

இன்று அமெரிக்கர் என அழைக்கப்படும் மக்கள் அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்களான செவ்வியந்தியர்களை அழித்த ஐரோப்பியர்கள் என்பது வரலாறு.

வெள்ளை நிறவெறி
அவ்வாறே, இன்று ஆத்திரேலியர் என அழைக்கப்படும் மக்கள், ஆத்திரேலியப் பழங்குடி மக்களை அழித்த ஐரோப்பியர்கள் என்பதே வரலாறு.   ஆகவே, ஐரோப்பியர்கள் தங்கள் இன வளர்ச்சிக்காக எந்த இனத்தையும் அழிக்கத் தயங்காதவர்கள் என்பது வரலாறு.

இந்த வரலாற்றின் படி, இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு இந்தோ ஐரோப்பியர்களின் தலைவர்களாகிய பிராமணர்களுக்கு ஐரோப்பியர் துணை போயிருப்பது இயல்பான ஒன்றேயாகும்.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது) 
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment