2.8.11


புதிய வலைப்பூ முகவரி

அருள்கூர்ந்து www.thamilarsamayam.blogspot.com என்னும் முகவரிக்கு செல்லவும்!
PDF இல் சேமிக்க‌

30.6.11

திருநீறா? சிலுவையா? – 7


பழைய ஏற்பாட்டில்: கண்களுக்கிடையில் நினைவுச்சின்னம்
“ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும்” (விடுதலைப் பயணம் 13:9)

புதிய ஏற்பாட்டில்: நெற்றியில் பொறித்திருந்தனர்
“சீயோன் மலை மீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன்.  அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர்.  (திருவெளிப்பாடு 14:1)

திருச்சபை வரலாற்றில்: நெற்றியில் திருநீறு
இன்றும் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுத்திருநாள் அன்று நெற்றியில் திருநீறு அணியும் வழக்கம் ஐரோப்பிய வழிக் கிறித்தவர்களில் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து வருகிறது. 

ஆகவே, நெற்றியில் அடையாளம் இடும் வழக்கம் பைபிளிலிருந்து உருவான ஒன்றே என்பதில் ஐயமில்லை.  

திருநீறு பூசிய சைவர்
பைபிள் வழியில் திருநீற்றை அணியும் சைவ மக்களின் சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.  பன்னிரு திருமுறைகளில் முதன்மையானது மூவர் பாடிய தேவாரம்.  மூவர் பாடிய தேவாரங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்.  திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் திருநீற்றைச் சிறப்பித்துப் பத்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.  இவை “திருநீற்றுப் பதிகம்” என்ற பெயரால் சைவப் பெருமக்களால் போற்றப்படுகின்றன.  திருநீற்றுப் பதிகத்தின் சில பகுதிகள்:
மந்திரமாவது நீறு…             - வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு…  - துதிக்கப்படுவது நீறு
வேதத்திலுள்ளது நீறு…                  - வெந்துயர் தீர்ப்பது நீறு
பாவம் அறுப்பது நீறு…                   - வானம் அளிப்பது நீறு
முத்தி தருவது நீறு…                        - சத்தியமாவது நீறு
ஆலமதுண்டமிடற்று எம்மான் ஆலவாயன் திருநீறே.

 திருஞானசம்பந்தரால் பாடப்பட்டிருக்கும் திருநீற்றுப் பதிகத்திலுள்ள திருநீறு 
1.    இறைவன் சாவை ஏற்று, பின்னர் அதை வென்றார்.  (ஆலமதுண்டமிடற்று எம்மான்)
2.    உலக மக்களின் பாவத்தைப் போக்கினார்.  (பாவம் அறுப்பது நீறு)
3.    இந்த நற்செய்தியை வெளிப்படுத்தும் வேதத்தில் கூறப்பட்டிருப்பது திருநீறு.  (வேதத்தில் உள்ளது நீறு.)
என்று தெளிவாக வரலாற்று அடிப்படையில் விளக்கப்பட்டிருக்கிறது. 

வேதம் எது?
திருநீற்றுப் பதிகம் தேவாரத்தின் ஒரு பகுதி.  தேவாரம் பன்னிரு திருமுறைகளின் பகுதி.  பன்னிரு திருமுறை சைவப் பெருமக்களால் ‘வேதம்’ என்று குறிக்கப்படுவதில்லை.  

அப்படியானால் திருநீற்றுப் பதிகத்தால் சிறப்பிக்கப்படும் வேதம் எது?
ரிக், யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் திருநீற்றைப் பற்றிய குறிப்பும் இல்லை.  திருநீற்றை அணியும் வழக்கமும் இல்லை.  சிவக்குடும்ப வழிபாடும் இல்லை. 
பைபிளைத் தவிர திருநீற்றைச் சிறப்பிக்கும் வேறு வேதம் ஏதாவது இருக்கின்றதா?
திருநீற்றைச் சிறப்பிக்கும் சைவப் பெருமக்களின் சிந்தனைக்கு இக்கேள்விகள் வைக்கப்படுகின்றன.  

சிலுவை அன்று திருநீறே 
மொத்தத்தில் கிறித்தவ ஆன்மீக நற்செய்தியை விளக்கும் சின்னம் சிலுவை அன்று திருநீறே என்னும் புதிய உண்மை தோமா வழிக் கிறித்தவமாகிய சைவ சமயத்தின் வழி உலகுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.  

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய "திருநீறா? சிலுவையா?" என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌