31.1.11

சார்லசு தார்வினுக்கு உயிரைப் பற்றித் தெரியுமா?


உயிரின் வேலை

உடலின் உள்ளுறுப்புகளை இயக்கி உடல் அழியாதவாறு உயிர் பாதுகாக்கிறது.
  1. உணவு செரிக்கப்படல்
  2. செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல்
  3. இரத்தம் துப்புரவாக்கப்படல்
  4. துப்புரவாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படல்
  5. தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படல்
  6. உடலுக்குத் தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படல்
ஆகிய இயல்பூக்கச் (Natural Instinct) செயல்களை உயிர் செய்து கொண்டிருக்கிறது. 

உடலை விட்டு உயிர் நீங்கியவுடன் உயிரின் செயல்பாடுகள் அனைத்தும் நின்று விடுகின்றன. 

இதனால் உடல் அழியத் தொடங்குகிறது.  செயல்பட்டுக் கொண்டிருக்கும் உயிருள்ள உடலையும் அழிந்து கொண்டிருக்கும் உயிரற்ற உடலையும் நம்மால் பிரித்து அறிய முடிகிறது. 

அறிவியல் காலந்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.  இதுவரை வளர்ந்துள்ள அறிவியலில் உயிரற்ற பொருள்களும் உயிரினங்களின் உடல்களும் ஆராயப்பட்டுள்ளன. 
தார்வினின் படிநிலை வளர்ச்சிக்கொள்கை, உயிரினங்களின் உடலின் படிநிலை வளர்ச்சியை ஆராய்ந்துள்ளது. 

குரங்குக்கும் மனிதனுக்கும் உடல் அளவில் ஒற்றுமை காணப்படுவதை விளக்குகிறது. 

உயிரினத்தை ஆராய்வது என்பது, உயிரினத்தின் உடலையும் உயிரையும் ஆராய்வது ஆகும். 

தார்வின்: உண்மையில்லை! 
உயிரினத்தின் உடலை மட்டும் ஆராய்வது, உயிரினத்தின் வளர்ச்சிப்படிநிலைகளை ஆராய்வது ஆகாது.  உயிரினத்தின் வளர்ச்சிப் படிநிலைகளை ஆராய்வது என்பது, உயிரினத்தினுடைய உயிரின் வளர்ச்சிப் படிநிலைகளை ஆராய்வதில் அடங்கியிருக்கிறது. 




(பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய 'உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment