19.2.11

இந்து மதம் தமிழர்களுடைய தமிழர் சமயம்


‘இந்து மதம்’ என்பது சைவ, வைணவ மதங்களின் பொதுப்பெயராக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான ஒரு புதுப் பெயர் என்பதைப் பார்த்தோம்.  இதனால் இந்து மதம் யாருடையது என்பதைக் காண சைவ, வைணவ மதங்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது.  இதைக் காண சைவ, வைணவ சமயங்களின் வரலாற்றை நோக்குவோம். 

சைவ சமயத்தை வளர்த்த நாயன்மார்கள் அறுபத்து மூவர்.  63 நாயன்மார்களும் தமிழகத்தில் மட்டும் பிறந்தவர்கள்.

நாயன்மார் அறுபத்து மூவர்

வைணவ சமயத்தை வளர்த்த ஆழ்வார்கள் பன்னிருவர்.  12 ஆழ்வார்களும் தமிழகத்தில் மட்டும் பிறந்தவர்கள்.
ஆழ்வார்கள் பன்னிருவர்


  1. சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறை.  பன்னிரு திருமுறையும் தமிழ்மொழியில் மட்டுமே இருக்கிறது. 
  2. வைணவ சமய இலக்கியங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன. 
  3. இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான சைவக் கோவில்கள் ஏறத்தாழ இருநூற்று எண்பது ஆகும்.  இந்த இருநூற்று எண்பது கோவில்களில் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
  4. இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான வைணவக் கோவில்கள் நூற்று எட்டு.  இதில் தொண்ணூற்றாறு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
  5. சைவ சமயத்தின் தலைமைக் கோவில் சிதம்பரம் நடராசர் கோவில்.  சிதம்பரம் தமிழகத்தில் இருக்கிறது.
தில்லை - சைவத்தின் தலைமைக் கோவில்
 வைணவத்தின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் உள்ளது.  திருவரங்கம் தமிழகத்தில் இருக்கிறது. 
திருவரங்கம் - வைணவத் தலைமைக் கோவில்

தமிழ்நாட்டில் உருவான சைவம், வைணவம் ஆகிய இரண்டற்கும் ஒரு பொதுப் பெயர் கொடுக்க வேண்டுமானால் அது “தமிழர் சமயம்” என்று இருப்பதே பொருத்தமானது.  சைவம், வைணவம் ஆகிய இந்து மதம் தமிழர்களின் தமிழர் சமயம் என்பதில் ஐயமில்லை. 


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 

PDF இல் சேமிக்க‌

3 கருத்துகள்:

சுதர்ஷன் said...

வாழ்த்துக்கள் .. உண்மை தான் ..தமிழரின் தாய் மதமும் கூட :)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

Anonymous said...

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப்பெருமாள் தமிழ்நாட்டவர் அன்று.

அவர் கொச்சிக்கருகிலுள்ள ஒரு சிறுநாட்டின் குறுனிலமன்னன் ஆவார்.

சைவம், வைணவம் இரண்டும் இந்தியா முழுமைக்கும் பொதுவாக அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அவை தமிழ்ப்பாடல்களில் வழியாக வழிபடப்பட்டால் உடனே அது
தமிழர் சமயம் என்றாகி விடாது.

மேலும், வைதீகமதம் என்னும் சனாதன மதம் தமிழ்நாட்டுச் சமயமல்ல.
அது வடவர்களில் சமயம். அங்கிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.
அது தமிழ்நாட்டு வழிபாட்டை பின்பற்றும் சைவம், வைணவம் இரண்டையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு, வடமொழி மந்திரங்கள், வேதங்கள் பாராயணங்கள்,
வடக்கு வழிபாட்டு முறைகள் அனைத்தும் சேர்த்து ஒரு கலவைச் சமயமாக்கிக் கொண்டதைத்தான் இன்று வரை தமிழர்கள் பின்பற்றுகிறார்கள்.

இது நடந்தது சங்ககாலத்துக்கும் முன்பே. எனவே தமிழர் சமயம் என்றால்,
அக்காலத்துக்கும் முன்பே நின்றுலாவிய சமயம் ஒன்றையே குறிக்கும்.

அது என்ன சமயம் ?

பகுத்தறிவு said...

//பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப்பெருமாள் தமிழ்நாட்டவர் அன்று. அவர் கொச்சிக்கருகிலுள்ள ஒரு சிறுநாட்டின் குறுனிலமன்னன் ஆவார்.//
தோழர், குலசேகரப் பெருமாள் அன்றைய சேர நாட்டைச் சேர்ந்தவர். அவர் தமிழர் தாம்! அவர் அருளிச் செய்தது தான் பெருமாள் திருமொழி என்னும் தமிழ் நூல் ஆகும்.
//சைவம், வைணவம் இரண்டும் இந்தியா முழுமைக்கும் பொதுவாக அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அவை தமிழ்ப்பாடல்களில் வழியாக வழிபடப்பட்டால் உடனே அது தமிழர் சமயம் என்றாகி விடாது. //
இந்தியா முழுமைக்கும் பொதுவாக வழிபடப்படும் இரு சமயங்களின் தலைமைக் கோவில்கள் இரண்டும் தமிழ்நாட்டில் தானே இருக்கின்றன. மிகப் பழமையான கோவில்கள் பெரும்பாலானவை (சைவத்தில் 280இல் 274உம் வைணவத்திருப்பதிகள் 108இல் 96உம்) தமிழ்நாட்டில் மட்டும் உள்ளன என்பதே அவை தமிழரால் உருவாக்கப்பட்டுப் பரவிய சமயங்கள் என்பதற்கான சான்றல்லவா?
//மேலும், வைதீகமதம் என்னும் சனாதன மதம் தமிழ்நாட்டுச் சமயமல்ல. அது வடவர்களில் சமயம். அங்கிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.//
சனாதனம் என்பது மதம் இல்லை. அது ஒரு தருமம் என்று சொல்லப்படுகிறது. அதன் மறுபெயர்கள் தாம் இந்துத்துவா, வருணாசிரமம், மனு தருமம், சாதி ஏற்றத்தாழ்வு என்பதெல்லாம் ஆகும்.
//அது தமிழ்நாட்டு வழிபாட்டை பின்பற்றும் சைவம், வைணவம் இரண்டையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு,//
இந்தச் சனாதன தருமம் (இந்துத்துவா) என்னும் சாதி ஏற்றத்தாழ்வு தான் சைவத்தையும் வைணவத்தையும் அழுத்திக் கொண்டு இருக்கிறது.
// வடமொழி மந்திரங்கள், வேதங்கள் பாராயணங்கள், வடக்கு வழிபாட்டு முறைகள் அனைத்தும் சேர்த்து ஒரு கலவைச் சமயமாக்கிக் கொண்டதைத்தான் இன்று வரை தமிழர்கள் பின்பற்றுகிறார்கள். இது நடந்தது சங்ககாலத்துக்கும் முன்பே. //
சங்க காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. வடமொழி என்று பொதுவாகக் குறிக்கப்படுகின்ற சமற்கிருதம் கி.பி. இல் உருவாக்கப்பட்ட ஒரு மொழி ஆகும். எனவே தான் கி.மு. முதல் நூற்றாண்டில் ஆண்ட அசோக மாமன்னர் பெளத்த சமயக் கொள்கைகளைப் பரப்பிய போது நிறுவிய கல்வெட்டுகளில் ஒன்று கூடச் சமற்கிருதத்தில் இல்லை. எனவே வடமொழி மந்திரங்கள், வேதங்கள், பாராயணங்கள் எல்லாம் பிற்காலத்தில் எழுந்தவையே!

//எனவே தமிழர் சமயம் என்றால், அக்காலத்துக்கும் முன்பே நின்றுலாவிய சமயம் ஒன்றையே குறிக்கும். அது என்ன சமயம் ?// சங்க காலத் தமிழர்களிடம் கொற்றவை வழிபாடு முதலிய வழிபாடுகள் இருந்தனவே ஒழிய மதம் இல்லை! சைவம், வைணவம் ஆகியன தோன்றிய காலம் கி.பி. தான்! சைவம், வைணவம் ஆகிய இரண்டும் வலியுறுத்தும் மூவொரு கடவுள் கோட்பாடு என்பது கி.பி. இல் எழுந்த ஒரு கோட்பாடேயாகும்.

Post a Comment