18.2.11

இந்திய மதங்கள், இந்து மதம், இந்துத்துவா


4. இந்திய மதங்கள்:

இந்தியாவில் தோன்றிய 1. சமணம் 2. பெளத்தம் 3. சைவம் 4. வைணவம் 5. சீக்கியம் ஆகிய ஐந்து மதங்களும் இந்திய மதங்கள் எனப்படும்.  இந்திய மதங்கள் என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.

5. இந்து மதம்:

1. “அம்பேத்கார் இந்து மதத்தில் இருந்து பெளத்த மதத்திற்கு மதம் மாறினார்”
2. “பஞ்சாபில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சண்டை”
3.“குசராத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சமண மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சர்ச்சை”
என வரும் ஊடகச் செய்திகள் இந்திய மதங்கள் ஐந்தில், பெளத்தம், சீக்கியம், சமணம் ஆகிய மூன்றும் இந்து மதம் என்னும் பெயரில் சேர்க்கப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன.  இதிலிருந்து சைவம், வைணவம் ஆகிய இரு மதங்கள் மட்டுமே “இந்து மதம்” என்னும் பெயரால் குறிக்கப்படுகின்றன என்று விளங்குகின்றது.  இதற்குக் காரணம் என்ன? என்னும் கேள்வி எழுகின்றது. 

6. இந்துத்துவா

            இந்துத்துவா என்பது ஆரியப் பிராமணர்களின் நிறவெறிக்கொள்கையாகிய வாழ்க்கை முறை என்பதையும் இது மதம் இல்லை என்பதையும் முன்பு பார்த்துள்ளோம்.  இந்துத்துவாத் தலைவர்களாகிய ஆரியப் பிராமணர்களை இந்து மதத் தலைவர்கள் என நம்பும் தவறான நம்பிக்கை இந்திய மக்களிடத்தில் இருக்கிறது என்பதையும் பார்த்தோம். 

இந்துத்துவா
 இதற்குக் காரணம் இந்திய மதங்கள் ஐந்தில், சைவம், வைணவம் ஆகிய இரண்டு மட்டும் “இந்து மதம்” என்னும் பெயரால் அழைக்கப்படுவதற்குக் காரணம் இந்த இரண்டு மதங்கள் மட்டுமே ஆரியப் பிராமணர்களின் இந்துத்துவாக் கொள்கையாகிய நிறவெறிக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ளமை ஆகும்.  ஆகவே இந்துத்துவாக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ள சைவம், வைணவம் ஆகிய இரண்டு மதங்கள் மட்டுமே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவ்விரண்டு மதங்களுக்கும் பொதுப்பெயரான இந்து மதம் என்னும் புதுப் பெயரைப் பெற்றமை ஆகும். 


ஆங்கில ஆட்சிக் காலத்திற்கு முன்னர் இந்திய வரலாற்றில் எங்குமே “இந்து மதம்” என்னும் பெயர் இடம் பெறவில்லை என்பது வரலாறு. 

“இந்துத்துவா” என்பது ஆரியப் பிராமணர்களின் நிறவெறிக் கொள்கையையுடைய வாழ்க்கை முறை என்பதையும் அது “இந்து மதம்” இல்லை என்பதையும் “இந்து மதம்” என்பது சைவ, வைணவ மதங்கள் என்பதையும் இந்துத்துவாக் கொள்கைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற காரணத்தால் இவை ஆங்கில ஆட்சிக் காலத்தில் ‘இந்து மதம்’ என்னும் புதிய பெயரைப் பெற்றன என்பதையும் பார்த்துள்ளோம். 

ஆரியப் பிராமணர்களின் எதிரிகளாகிய திராவிட இனத்தின் தலைமை நிலையில் இருப்பவர்கள் தமிழர்கள் என்பதும், தமிழர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந்து மதத்திற்குத் தலைவர்கள் இல்லாமையால் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் இனம் அழிக்கப்படும்பொழுது இவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மதத்தலைவர்கள் இல்லை என்பதையும் பார்த்துள்ளோம்.

அப்படியானால் இந்து மதம் யாருடையது? என்னும் கேள்வி எழுகின்றது. 


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment