- இந்து
- இந்துக்கள்
- இந்திய வழிபாடுகள்
- இந்திய மதங்கள்
- இந்து மதம்
- இந்துத்துவா
ஆகிய ஆறு பெயர்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட பொருள்களை விளக்கக்கூடியன என்பதை இந்திய மக்கள் உணர்ந்து கொள்ள இயலா நிலையில், இந்திய ஆரியப் பிராமணர்கள் இந்தியக் கல்வி முறையையும் இந்திய ஊடகங்களையும் மிகத் திறமையாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.
‘இந்து’ என்னும் ஒரு பெயர், இந்த ஆறு பொருள்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதாகப் பிராமணர்களால் இந்திய மக்கள் தவறாக நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆறு பெயர்களும் வெவ்வேறு பொருள்களுடையவை என்பதை முதலில் பார்ப்போம்.
1. இந்து:
![]() |
சிந்துவே இந்துவானது |
இந்தியா மூன்று பக்கங்களில் கடல்களையும் ஒரு பக்கத்தில் மலையையும் இயற்கை அரண்களாகக் கொண்டது. இந்தியாவிற்கு வெளியேயிருந்து தரை வழியாக இந்தியாவிற்குள் நுழைய விரும்புகின்றவர்கள், இமய மலையைக் கடந்து வரவேண்டும். இவ்வாறு வருகின்றவர்கள் இமய மலையிலுள்ள கைபர், போலன் கணவாய்களைக் கடந்து, இந்தியாவில் நுழைந்தவுடன் அவர்கள் காண்பது சிந்து நதியையாகும். ‘சிந்து’ என்னும் பெயரை உச்சரிக்க இயலாத அந்நியர்கள், அதை ‘இந்து’ என உச்சரித்தனர் என்பது வரலாறு. ஆகவே, ‘இந்து’ என்பது ஓர் ஆற்றின் பெயரைக் குறிப்பதே தவிர, மதத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை.
2. 2. இந்துக்கள்:
![]() |
திராவிட நாகரிகம் |
இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற சிந்து வெளி நாகரிகப் புதைபொருள் ஆராய்ச்சிக்கு முன்னர் திராவிட இனத்தின் நாகரிகச் சிறப்பை உலகம் அறியாமல் இருந்தது. சிந்து வெளி நாகரிக ஆராய்ச்சி அங்கே குடியிருந்த திராவிட இனத்தின் நாகரிகச் சிறப்பை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
இதனால் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் திராவிடர்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது. சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்களை வேற்றவர்கள் “சிந்துக்கள்” என அழைப்பதற்கு மாற்றாக “இந்துக்கள்” என அழைத்தனர்.
இதனால் “இந்துக்கள்” என்பது சிந்து நதிக்கரையில் வாழ்ந்த திராவிடர்களைக் குறிக்கிறது. ஆகவே ‘இந்துக்கள்’ என்பது திராவிட இனத்தினரைக் குறிக்கிறது. இதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
3. 3. இந்திய வழிபாடுகள்:
வழிபாடுகள் வேறு; மதங்கள் வேறு. உலகில் மனிதர்கள் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் வழிபாடுகள் உருவாயின. ஆனால் மதங்கள் அனைத்தும் ஆசியாக் கண்டத்தில் மட்டுமே உருவாயின. ஐரோப்பாவில் ஒரு மதமும் உருவாகவில்லை. உலகம் முழுவதும் வழிபாடுகள் இருந்ததைப் போன்று இந்தியாவிலும் வழிபாடுகள் இருக்கின்றன. இவை மதங்கள் அல்ல. ஆகவே, இந்திய வழிபாடு என்பது இந்து மதத்தைக் குறிக்காது.
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
2 கருத்துகள்:
சுட்டியை சொடுக்கி படிக்கவும்
===>இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணகளின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
===>1. ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு கழித்தவர்.
...
தோழர், இனி வரும் பதிவையும் படித்துப்பாருங்கள்.. இந்து மதம் என்பது யாருடையது, எப்படி இந்து என்னும் பெயர் மதத்திற்கு வந்தது என்பதற்கான விளக்கங்கள் கிடைக்கும். http://meykandar.blogspot.com/2011/01/blog-post_06.html பதிவையும் http://meykandar.blogspot.com/2011/01/3.html பதிவையும் படித்துப் பாருங்கள்...
Post a Comment