2.1.11

யார் இவர்? புதிர் போட்டி



1. இவன் முதல் மனிதன்
2. பெற்றோர்களிடத்தில் பிறக்காத ‘பிறவா யாக்கைப் பெரியோன்’.
3. இவனது ஆடை விலங்கின் தோலால் ஆனது.
4. இவனுடைய மூன்றாம் கண் திறக்கப்பட்டுள்ளது.
5. இவன் உடலின் ஒரு பகுதியே இவன் மனைவி.
6. இவன் மனைவி ‘உலகின் தாய்’ என்று சொல்லப்படுகிறாள்.
7. இவனும் இவன் மனைவியும் ‘அம்மையப்பர்’ எனப்படுகின்றனர்.
8. இவன் குடும்பத்தின் குழப்பத்திற்கு மூல காரணம் ஒரு பழமே ஆகும்.
9. ஒரு பாம்போடு இவன் தொடர்புபடுத்தப்படுகிறான்.
10. எல்லாப் படைப்புகளும் இவன் ஆளுகைக்கு உட்பட்டவையே.
11. உலகில் உள்ள அனைத்து நன்மை தீமைகளுக்கும் இவனே மூலகாரணன்.
12. இன்றுவரை இவனது பாதங்களை இலங்கையில் சிறப்பிக்கின்றனர்.

யார் இவன்? கண்டுபிடித்து விட்டீர்களா?

நீங்கள் சைவராக இருந்தால் 'சிவன்' என்றும் கிறித்தவராக இருந்தால் 'ஆதாம்' என்றும் நினைத்திருக்க வாய்ப்புண்டு.  எப்படி இந்த ஒற்றுமை வந்தது - கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே!

(மு. தெய்வநாயகம், சிந்தனைக்கு விருந்து-1,வாயில், சூன் 1976)

PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment