28.1.11

உயிரின் வேலை என்ன?


  உயிர் இனங்கள் அனைத்தும் உடல், உயிர் ஆகிய இரண்டையும் கொண்டு விளங்குகின்றன.  உயிருள்ள உடலையும் உயிர் இல்லாத உடலையும் நம்மால் பிரித்து அறிய முடிகின்றது.
இதனால்,
1.    உயிர்
2.    உடல்
3.    உயிரும் உடலும் இணைந்த உயிரினம்
ஆகிய மூன்றையும் நம்மால் தனித்தனியாகப் பிரித்து அறிய முடிகின்றது.  இந்தப் பிரிவின்படி தமிழ் எழுத்துகள், உயிர், மெய் (உடல்), உயிர்மெய் என்று பிரிக்கப்பட்டு
1.    உயிர் எழுத்து
2.    மெய் எழுத்து
3.    உயிர்மெய் எழுத்து
என்று குறிக்கப்படும் பாங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது ஆகும். 

உயிரற்ற உடல், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் இணைப்பாக இருக்கின்ற காரணத்தால் உயிரினத்தின் உயிர் நீங்கியவுடன் உயிரினத்தின் உடல் உயிரற்ற ஐம்பெரும் பூதங்களோடு இணைந்து விடுகின்றது. 

உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் உயிர்களுக்கு உரிய உருவத்தில் நமக்குக் காட்சியளிக்கின்றன. 

உயிர் இருக்கும் வரை உயிரினத்தின் உருவம் அழிவதில்லை.  உயிர் நீங்கியவுடன் உயிரினத்தின் உருவம் அழியத் தொடங்குகிறது.  உயிர்கள் அனைத்தும் பிறக்கின்றன. பிறக்கும் பொழுது உயிர்கள் அனைத்தும் உடலுடன் இணைந்தே பிறக்கின்றன.  உடலை அழியாமல் பாதுகாக்கும் வேலையை உயிர் செய்து கொண்டிருக்கிறது.  


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்' என்னும் புத்தகத்தில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment