31.12.10

கடவுள் இருக்கின்றாரா?



தந்தை பெரியார், கடவுள் ஏற்பாளரே என்பதைக் கடந்த மூன்று பதிவுகளில் கண்டோம்.  அக்கருத்துக்கு வலு சேர்க்கும் நிலையில் இன்னொரு செய்தியையும் தெரிந்து கொள்ளுங்கள்.  தந்தை பெரியார் தம்முடைய இறுதிக்காலம் வரை பிள்ளையார் கோவில் ஒன்றிற்கு அறங்காவலராக இருந்தார் என்பது தான் அச்செய்தியாகும். 
            அது சரி!  உங்களிடம் இப்போது ஒரு கேள்வி!  கடவுள் இருக்கிறார் என்று நம்புவது சரியா?  கடவுள் இல்லை என்று நம்புவது சரியா?

கடவுள் இருக்கின்றார் என்று நம்பியவுடன் இல்லாத கடவுள் இருந்துவிடப் போவதில்லை.  கடவுள் இல்லை என்று நம்பியவுடன் இருக்கின்ற கடவுள் இல்லாமல் ஆகிவிடுவதில்லை. 
            

இருக்கின்றார், இல்லை என்பவை இரண்டுமே நம்பிக்கையின் பாற்பட்டவையாயின் இரண்டும் மூட நம்பிக்கைகளே.  சரியான தெளிவில்லாமல் நம்புகின்ற எதுவுமே மூட நம்பிக்கைதான்.  இதிலே தெளிவடைய முடியுமா?  இனிவரும் பதிவுகளில் காண்போம்.  
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment