5.3.11

உலகம் முழுவதும் நடைபெறும் பயங்கரவாதத்திற்குத் தீர்வு என்ன? – 3

உலக மக்களாட்சியைக் கொண்டு வருவது யார்?
உலக சமயத் தலைவர்கள் உலக மக்கள் அனைவரும் அன்பும் ஐக்கியமுமாக வாழ வேண்டுமென்று வழி காட்டுவதற்காகவே, உலக சமயங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகிலுள்ள சமயத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும்போது உலக அரசியல் தலைவர்கள் அதை எண்ணிப் பார்ப்பதற்குத் தூண்டப்படுவது இயல்பு.

உலக சமயத் தலைவர்களால் தூண்டப்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதம் உலகிலிருந்து நீங்குவதற்கு உலக மக்களாட்சியை உருவாக்க வேண்டுமென்னும் முடிவுக்கு வந்துவிட்டால், உலக மக்களாட்சி உருவாவது திண்ணம்.

இன்றையல் நிலையில் உலக மதத் தலைவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு இந்தக் கருத்தை எடுத்துக் கூறி, அவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த நிலையில் குரல் கொடுக்கத் தூண்டும் உலகளாவிய சமயத் தலைவராக விளங்கிக் கொண்டிருப்பவர் போப்பாண்டவர் ஆவார்.

கத்தோலிக்கக் கிறித்தவ சமயத் தலைவராகிய போப்பாண்டவருடன் நடத்திய நம் கடிதத் தொடர்பு அவரும் நிறவெறிய ஆதரிக்க வேண்டியவர் என்பதை வெளிப்படுத்தியது என்பதைப் பார்த்தோம்.  உலகில் பயங்கரவாதம் பெருகியிருப்பதற்கு நிறவெறி காரணமாயிருப்பதையும் பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்ற வேண்டியதும் மக்களாட்சிக்காக உழைக்க வேண்டியதுமாகிய ஆன்மீகக் கடமை அவருக்கு இருக்கிறது என்பதும் சரியான முறையில் அவரிடத்தில் கூறப்படல் வேண்டும்.

போப்பாண்டவரிடம் இந்தக் கருத்தை, அவர் உள்ளம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் எடுத்துக் கூறி அவர் அதைச் செயல்படுத்தும் நிலையில் அவருக்குத் துணையாயிருக்கும் ஆன்மீகச் சிந்தனையாளர் இதைச் செயல்படுத்தப் புறப்பட்டால், இச்செயல்பாடு நிறைவேறக் கூடிய காலக் கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உலக அரசியல் தலைவர்கள்
சமயத் தலைவர்களை ஒன்றிணைத்து உலக மக்களாட்சிக்காகக் குரல் கொடுக்கக்கூடிய நிலையில் உலகில் போப்பாண்டவர் இருப்பது போன்று, உலக அரசியல் தலைவர்களை ஒன்றிணைத்து உலக மக்களாட்சி நடைமுறைக்கு வருவதற்குத் துணை நிற்கக்கூடிய ஆற்றல் அமெரிக்க அதிபராக இருக்கும் பராக் ஒபாமா அவர்களுக்கு இருக்கிறது.

ஒபாமா, நிறவெறியையுடைய அமெரிக்காவின் முந்தைய நிலையை உடைத்தெறிந்தவராகக் காணப்படுகிறார்.

பராக் ஒபாமா உலக வல்லரசாகிய அமெரிக்கத் தலைவராக இருப்பதுடன், அவருடைய பிறப்பால் வெள்ளையினம், கருப்பினம், கிறித்தவ மதம், இசுலாமிய மதம் ஆகிய நான்கும் ஒன்றிணைந்தவராகவும் விளங்குகிறார்.

இதனால், மதத் தலைவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து, உலகிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து, உலகில் பயங்கரவாதத்தை நீக்கக்கூடிய உலக மக்களாட்சியை உருவாக்கி, உலக நீதிமன்றத்தை அமைக்கும் சிறப்புக்கு உரியவராக பராக் ஒபாமா விளங்குகிறார்.

PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment