18.3.11

திருநீறா? சிலுவையா? – 2



திருநீறு தயாரிக்கும் முறை
பாவம் நீக்கும் சாம்பல் அல்லது திருநீறு தயாரிக்கும் முறை பழைய ஏற்பாட்டில் உள்ள எண்ணாகமம் 19ஆம் அதிகாரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.  அதன் சுருக்கம் வசன எண்களுடன் கீழே கொடுக்கப்படுகிறது.

2ஆம் வசனம் – பழுதற்ற செங்கிடாரி ஒன்று
3ஆம் வசனம் – பாளையத்திற்குப் புறம்பே எடுத்துச் செல்லப்பட்டு அடிக்கப்படும்.
5ஆம் வசனம் – அதன் தோல், தசை, இரத்தம் ஆகியவை சாணியுடன் சுட்டெரிக்கப்படும்.
9ஆம் வசனம் – கிடாரியின் சாம்பல் கூட்டப்பட்டு அது பாளையத்துக்கு வெளியே ஒரு தூய்மையான இடத்தில் கொட்டி வைக்கப்படும்.  அது பாவ நிவர்த்திக்காகப் பயன்படும்.

இரத்தமும் சாம்பலும்
இரத்தமும் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்பொழுது அவர்கள் தூய்மை பெறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது (எபி. 9:13).

ஆடோ மாடோ கொல்லப்பட்டவுடன் இரத்தம் கிடைத்தது.  இரத்தத்தைச் சேமித்து வைத்து, வேண்டிய நேரங்களில் பயன்படுத்தவில்லை.  ஆனால் சாம்பல் சேமித்து வைக்கப்பட்டு, வேண்டிய நேரங்களில் பயன்படுத்தப்பட்டது.  கிடாரி எரிக்கப்படும்பொழுது, அதன் இரத்தமும் சாணமும் சேர்த்து எரிக்கப்பட்டு, அவற்றின் பயனாகச் சாம்பல் கிடைத்தது.  அதனால் சாம்பலில் இரத்தத்தின் பகுதியும் அடங்கியிருக்கிறது.  இரத்தமும் சாம்பலும் தூய்மைப்படுத்தும் கருவிகளாக விளங்குகின்றன. 
                                                                                                                                     - தொடரும்

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘திருநீறா? சிலுவையா?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment