2.8.11
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
07:18
0
கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


30.6.11
திருநீறா? சிலுவையா? – 7
பழைய ஏற்பாட்டில்: கண்களுக்கிடையில் நினைவுச்சின்னம்
“ஆண்டவரின்
சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும்”
(விடுதலைப் பயணம் 13:9)
புதிய ஏற்பாட்டில்: நெற்றியில் பொறித்திருந்தனர்
“சீயோன் மலை
மீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன்
பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து
நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர்.
(திருவெளிப்பாடு 14:1)
திருச்சபை வரலாற்றில்: நெற்றியில் திருநீறு
இன்றும் சாம்பல்
புதன் அல்லது திருநீற்றுத்திருநாள் அன்று நெற்றியில் திருநீறு அணியும் வழக்கம் ஐரோப்பிய
வழிக் கிறித்தவர்களில் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து வருகிறது.
ஆகவே, நெற்றியில்
அடையாளம் இடும் வழக்கம் பைபிளிலிருந்து உருவான ஒன்றே என்பதில் ஐயமில்லை.
![]() |
திருநீறு பூசிய சைவர் |
பைபிள் வழியில்
திருநீற்றை அணியும் சைவ மக்களின் சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைகளில் முதன்மையானது மூவர் பாடிய
தேவாரம். மூவர் பாடிய தேவாரங்களில் முதன்மையானதாகக்
கருதப்படுவது திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்.
திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் திருநீற்றைச் சிறப்பித்துப் பத்துப் பாடல்கள்
பாடப்பட்டுள்ளன. இவை “திருநீற்றுப் பதிகம்”
என்ற பெயரால் சைவப் பெருமக்களால் போற்றப்படுகின்றன.
திருநீற்றுப் பதிகத்தின் சில பகுதிகள்:
மந்திரமாவது
நீறு… - வானவர் மேலது நீறு
சுந்தரமாவது
நீறு… - துதிக்கப்படுவது நீறு
வேதத்திலுள்ளது
நீறு… - வெந்துயர் தீர்ப்பது
நீறு
பாவம் அறுப்பது
நீறு… - வானம் அளிப்பது நீறு
முத்தி தருவது
நீறு… - சத்தியமாவது
நீறு
ஆலமதுண்டமிடற்று எம்மான் ஆலவாயன் திருநீறே.
திருஞானசம்பந்தரால் பாடப்பட்டிருக்கும் திருநீற்றுப்
பதிகத்திலுள்ள திருநீறு
1.
இறைவன்
சாவை ஏற்று, பின்னர் அதை வென்றார். (ஆலமதுண்டமிடற்று
எம்மான்)
2.
உலக
மக்களின் பாவத்தைப் போக்கினார். (பாவம் அறுப்பது
நீறு)
3.
இந்த
நற்செய்தியை வெளிப்படுத்தும் வேதத்தில் கூறப்பட்டிருப்பது திருநீறு. (வேதத்தில் உள்ளது நீறு.)
என்று தெளிவாக
வரலாற்று அடிப்படையில் விளக்கப்பட்டிருக்கிறது.
வேதம் எது?
திருநீற்றுப்
பதிகம் தேவாரத்தின் ஒரு பகுதி. தேவாரம் பன்னிரு
திருமுறைகளின் பகுதி. பன்னிரு திருமுறை சைவப்
பெருமக்களால் ‘வேதம்’ என்று குறிக்கப்படுவதில்லை.
அப்படியானால்
திருநீற்றுப் பதிகத்தால் சிறப்பிக்கப்படும் வேதம் எது?
ரிக், யசுர்,
சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் திருநீற்றைப் பற்றிய குறிப்பும் இல்லை. திருநீற்றை அணியும் வழக்கமும் இல்லை. சிவக்குடும்ப வழிபாடும் இல்லை.
பைபிளைத் தவிர
திருநீற்றைச் சிறப்பிக்கும் வேறு வேதம் ஏதாவது இருக்கின்றதா?
திருநீற்றைச்
சிறப்பிக்கும் சைவப் பெருமக்களின் சிந்தனைக்கு இக்கேள்விகள் வைக்கப்படுகின்றன.
சிலுவை அன்று திருநீறே
மொத்தத்தில்
கிறித்தவ ஆன்மீக நற்செய்தியை விளக்கும் சின்னம் சிலுவை அன்று திருநீறே என்னும் புதிய
உண்மை தோமா வழிக் கிறித்தவமாகிய சைவ சமயத்தின் வழி உலகுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய "திருநீறா? சிலுவையா?" என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய "திருநீறா? சிலுவையா?" என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
19:32
0
கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


குறிச்சொல்
சிலுவை,
சைவர்,
திருநீறு,
திருநீற்றுப்பதிகம்,
தெய்வநாயகம்,
வேதம்
25.6.11
திருநீறா? சிலுவையா? - 6
திருநீறும் திருமண்ணும்
சைவர்கள் திருநீற்றால்
தங்கள் அடையாளத்தையும் வைணவர்கள் திருமண்ணால் தங்கள் அடையாளத்தையும் தங்கள் நெற்றிகளில்
இடுகின்றார்கள். சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னரே திருநீற்றிலிருந்து
திருமண் பயன்படுத்தப்பட்டது என்பது வரலாறு.
மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு மூன்றையும் திருநீறு விளக்கி நின்ற நிலையை
முன்னர்ப் பார்த்தோம்.
இயேசு கிறித்துவின்
உயிர்த்தெழுதலுக்கு முன்னர் செங்கிடாரி கொல்லப்பட்டு, அதனுடைய தோல், தசை, இரத்தம் ஆகியவை
சாணியுடன் சுட்டெரிக்கப்பட்டு திருநீறு தயாரிக்கப்பட்டது. இது வெறும் நீறு அன்று. சுத்திகரிக்கும் நீறு. அதனால் திருநீறு ஆகிறது. இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர்,
தயாரிக்கப்படும் திருநீறு, சுத்திகரிக்கப் பயன்படும் திருநீறு அன்று.
இயேசு கிறித்துவின்
மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் அறிவிக்கும் அடையாளமாக, பின்னர்த்
திருநீறு விளங்குகிறது. ஆகையால் கிறித்தவத்தில்
திருநீறு தயாரிக்கப்படுவதற்குக் கிடாரி கொல்லப்படவோ, தோல், தசை, இரத்தம் எரிக்கப்படவோ
அவசியம் இல்லை. இவை எல்லாம் கிறித்துவுக்குள்
நிறைவேறிவிட்டன. அதனால் திருநீறு தயாரிக்க,
கிடாரியின் சாணி எரிக்கப்பட்டாலே போதுமானது.
சாணி எரிக்கப்பட்டால்
அது நீறு ஆகுமே தவிர திருநீறாக எவ்வாறு ஆகும் என்று எண்ணலாம். கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு
ஆகிய மூன்றையும் குறிக்கும் அடையாளமாக நெற்றியில் இடப்படுகின்ற காரணத்தால் அது வெறும்
நீறு அன்று. திருநீறாக மாறிவிடுகிறது.
இயேசு கிறித்துவின்
உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் கடவுளின்
1. தந்தை நிலை
2. மகன் நிலை
3. பரிசுத்த ஆவிநிலை
ஆகிய மூன்று
நிலைகளையும் உலகம் அறியும் வகை ஏற்பட்டது.
இந்த மூன்று நிலைகளையும் விளக்குவதற்காகத் திருநீற்றால் மூன்று கோடுகள் இடப்படுகின்றன.
![]() | |||
திருநீறு,சந்தனம்,குங்குமம் |
இந்த மூன்று நிலைகளில், “மகன் மரத்தில் இரத்தம்
சிந்தியதால் பாவ மன்னிப்பு ஏற்பட்டது” என்பதை விளக்க, மூன்று கோடுகளால் மகனைக் குறிக்கும்
மையக் கோட்டின் மத்தியில் “மரத்தின் வழியாக இரத்தம் சிந்தினார்” என்பதைத் தெரிவிக்க,
சந்தன மரத்தினாலாகிய சந்தனப் பொட்டும்,
அப்பொட்டின் மத்தியில் இரத்தத்தைக் குறிக்க சிவப்புக் குங்குமப் பொட்டும் இடப்பட்டு, இயேசு கிறித்துவின் நற்செய்தி முழுமையாக
வெளிப்படுத்தப்படுகிறது. இது சைவத்தின் நிலை.
சைவத்திலிருந்து
வைணவம் பிரிந்த பின்னர் திருநீற்றிலிருந்து திருமண் அணியும் நிலை உருவாயிற்று. அத்துடன் “இரத்தம் சிந்தி மீட்டெடுத்தார்” என்பதை
விளக்க, “குங்குமப்பொட்டு வைப்பதை விட இரத்தம் வடிவதைக் காட்ட வேண்டும்” என்ற நிலை
உருவாக்கப்பட்டது. அதனால் நெற்றியில் படுக்கையாக
இடப்பட்ட மூன்று கோடுகள் மாற்றப்பட்டு செங்குத்தாக மேலிருந்து கீழாக இடப்பட்டன. மையக்கோடு இரத்தம் சிந்தும் கடவுளின் மகனாகக் காட்ட
சிவப்புக் கோடாக மாற்றப்பட்டது. மேலிருந்து
இரத்தம் சிந்தப்பட்டதைக் காட்ட சிவப்புக் கோடு மேலே ஒடுக்கமாகவும் கீழே வரவர அகலமாகவும்
அமைக்கப்பட்டது.
அறிய இயலா நிலை
கிறித்தவத்தின்
நற்செய்தியைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த
அடையாளங்களைச் சைவப் பெருமக்களும் வைணவப் பெருமக்களும் தினந்தோறும் தங்கள் நெற்றிகளில்
தவறாது இட்டுக்கொண்ட போதிலும், ஏன் இவ்வாறு அணிகின்றோம் என்று அவர்கள் அறிய இயலாத நிலை
ஏற்பட்டது வருந்தத்தக்க ஒன்றாகும்.
பைபிளும் நெற்றியில் அடையாளமிடுதலும்
ஐரோப்பிய வழிக்கிறித்தவர்கள்
நெற்றியில் அடையாளம் இடுவதில்லை. தோமா வழிக்கிறித்தவர்களாகிய
சைவர்களும் வைணவர்களும் நெற்றியில் அடையாளம் இடுகின்றார்கள். இது பைபிளுக்குப் பொருந்துமா? என்ற கேள்வி எழுகின்றது.
-
தொடரும்
(உலகத் தமிழர்
ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய “திருநீறா? சிலுவையா?”
என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
14:40
0
கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


குறிச்சொல்
உயிர்த்தெழுதல்,
கிறித்தவம்,
சிலுவை,
சைவம்,
திருநீறு,
தெய்வநாயகம்,
வைணவம்
திருநீறா? சிலுவையா? – 5
குறிப்பு: பின்னூட்டமிடுவோர் இத்தொடரின் முதல் நான்கு பதிவுகளையும் படித்து விட்டுப் பின்னூட்டமிடுங்கள். தொடர் இன்னும் விரியும்..
சைவ வைணவ சமயங்கள்
என்பன இரண்டு தனித்தனிச் சமயங்கள் அல்ல. சைவத்தின்
கிளையே வைணவம் ஆகும். அன்பின் மறுபெயர் ‘சிவன்’
என்பதாகும். சைவம் என்பது சிவனை அடிப்படையாகக்
கொண்டது. சிவபெருமானின் உடலின் இடப்பாகத்தைப்
பெண்ணாகக் கூறினால் அது சைவம். அதையே ஆணாக
கூறினால் அது வைணவம்.
கிறித்தவத்தில்,
தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்ற மூவொரு கடவுள் கோட்பாட்டில், பரிசுத்த ஆவியைப் பெண்ணாகக்
கொண்டு சைவம் பிறந்தது; பரிசுத்த ஆவியை ஆணாகக்
கொண்டு வைணவம் பிறந்தது. இதைப் பற்றி மேலும்
விளக்கம் வேண்டுவோர் “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வு” என்னும் ஆய்வு
நூலை நோக்குக.
![]() |
பலிபீடம் |
பைபிளில் யாக்கோபு
நாட்டிய நினைவுத்தூண், சைவத்தில் சிவலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. கிறித்துவிற்கு முற்பட்டது சிவலிங்க வழிபாடு. கிறித்துவிற்கு முற்பட்ட சிவலிங்க வழிபாட்டில்
பலி இருந்தது. யாக்கோபு பலியிட்டான். கிறித்துவிற்குப் பிற்பட்டது சிவக்குடும்ப வழிபாடு. சிவக்குடும்ப வழிபாட்டில் பலிபீடம் இருக்கிறது. ஆனால் பலி இல்லை. காரணம் பலி இயேசு கிறித்துவினால் நிறைவேற்றப்பட்டு
விட்டது என்பதாலேயேயாகும்.
தந்தை, பரிசுத்த
ஆவி, மகன் ஆகிய “மூவொரு கடவுள்” என்னும் கிறித்தவ இறையியல் கொள்கை,
1.
திருக்குறளில்
கடவுள், வான், நீத்தார் ஆகிய “இயல்புடைய மூவர்” என்றும்
![]() |
சோமாஸ்கந்தர் |
2.
சிவக்குடும்ப
வழிபாட்டின் ஒரு பிரிவாகிய சைவத்தில் அப்பன், அம்மை, மகன் ஆகிய “சோமாஸ்கந்தர்” என்றும்
![]() |
மும்மூர்த்தி |
3.
சிவக்
குடும்ப வழிபாட்டின் மற்றொரு பிரிவாகிய வைணவத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய “மும்மூர்த்தி”
என்றும்
குறிக்கப்படுகின்றது. சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் நெற்றியில் அடையாளம்
இடும் மரபு இருந்து வருகிறது.
- தொடரும்
(உலகத் தமிழர்
ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய “திருநீறா? சிலுவையா?”
என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
13:52
2
கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


குறிச்சொல்
சிலுவை,
சைவம்,
திருநீறு,
தெய்வநாயகம்,
மூவொரு கடவுள்,
வைணவம்
23.6.11
நரியின் சாயம் வெளுத்துப் போச்சு டும்.. டும்.... டும்.. - 2
- அருட்சகோதரி எழிலரசி
நம்முடைய
மொழி, பண்பாடு, இலக்கியம், சமயம் ஆகியவற்றில் ஈராயிரம் ஆரியர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ள
சில பொய்மைகளையும் அவற்றிற்கான ஆதாரப்பூர்வமான மறுப்புகளையும் மொழியறிஞர் திரு. சாத்தூர்
சேகரன் அவர்கள் “சிந்துவெளி நாகரிகம்” என்னும் தமது நூலில் பின்வருமாறு பட்டியலிட்டுக்
காட்டியுள்ளார்.
பெரிய
பொய்மைகள்:
1. திருவிட மக்களும் ஆரியரும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருந்து வந்தனர். இஃது பொய். குமரிக்கண்ட தமிழரே உலகெங்கும் பரவினர். சிந்துவெளி தமிழரே மேற்கேயும் வடக்கேயும் பரவினர்.
1. திருவிட மக்களும் ஆரியரும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருந்து வந்தனர். இஃது பொய். குமரிக்கண்ட தமிழரே உலகெங்கும் பரவினர். சிந்துவெளி தமிழரே மேற்கேயும் வடக்கேயும் பரவினர்.
2.
இந்தியாவின் தாய்மொழி சமஸ்கிருதமே. இது மாபெரும் பொய். இந்தியாவின் நான்கு
மூலைகளிலும் ஒரு நாள் ஒரு பொழுது கூடப் பேசப்படவில்லை. சமஸ்கிருதம் இந்தியாவிற்கு
வெளியேயும் பேசப்படவில்லை.
3.
சமஸ்கிருதம் ஒரு தொன்மையான மொழி. இதுவும் ஒரு பயங்கரமான பொய். கி.பி.
200க்கு முன்பாக சமஸ்கிருதம் இருந்தது என்பதற்கு ஒரு சான்று கூடக் கிட்டவில்லை.
4.
ஆரிய இனம் உயர்ந்த இனம். இதுவும் முழுப்பொய். உலகில் ஆரிய இனம் என்ற ஒன்று
கிடையாது என்று யுனெஸ்கோ கூறியுள்ளது. ஆனாலும் பிராமணப் பண்டிதர்களும் ஐரோப்பிய
இன வெறியர்கள் சிலர் மட்டுமே தமது நூல்களில் தாம் உயர்ந்தவர் என்று கூறி வருகின்றனர்.
ஆனால்
உலகில் உள்ள பல்வேறு வரலாற்று அறிஞர்கள் இன்னமும் பொய்யும் புழுகுமாக அரங்கேற்றப்பட்ட
பள்ளி, கல்லூரி மற்றும் ஆய்வு நூல்களில் இருந்து ஆரியர் பற்றிய பொய்ச்செய்திகளை வெளியேற்றிடவில்லை.
சமஸ்கிருத மொழி பற்றிய அறிஞர்களின் கருத்துகளைக் காண்போம். சமஸ்கிருதம் தொன்மையான
மொழி அன்று என சமஸ்கிருதம் தொடர்பான அறிஞர்களின் புதிய ஆய்வுக் கருத்துகளை முனைவர்
தெ. தேவகலா அவர்கள் ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறிஸ்தவ நாடே… எவ்வாறு?’ என்னும் நூலில்
சுட்டிக் காட்டுகின்றார்.
சமஸ்கிருதம்
பற்றிய விளக்கங்கள்:
- சமஸ்கிருதம் என்பது ஆரியர்களின் மொழி என்று பொதுவாக நம்பப்படுகிறது. சமஸ்கிருதம் தான் உலகின் முதல் மொழி – மிகப் பழமையான மொழி என்று பரப்பியவர்கள் 18, 19 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சர். வில்லியம் ஜோன்ஸ் மற்றும் மாக்ஸ்முல்லர் ஆவர்.
- ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அசோக மன்னனின் கல்வெட்டுகள், விலங்கு பலி தடை குறித்து எழுதப்பட்ட பொழுது அக்காலத்தில் வழக்கில் இருந்த இந்திய மொழிகளிலும் அவரது அரசாட்சியில் இருந்த வெளிநாட்டு மொழிகளான கிரேக்க, அரமேய மொழிகளிலும் எழுதப்பட்டு உள்ளன. ஆனால் அசோகரின் கல்வெட்டு ஒன்று கூட சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை.
- கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் இருந்திருந்தால் அது ஆரிய மொழியாகவும் இருந்திருந்தால், ஆரிய வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் ‘விலங்கு பலி தடை செய்யப்பட்டது’ என்ற செய்தியை, கல்வெட்டுகளில் எழுதுவதற்கு அசோக மன்னன் சமஸ்கிருதத்தையும் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சமஸ்கிருதத்தில் காணப்படாமை நோக்கற்குரியது.
- கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் சமஸ்கிருத கல்வெட்டுகள் காணப்படவில்லை. கி.பி. 150 இல் தான் முதல் சமஸ்கிருதக் கல்வெட்டு காணப்படுகிறது.
- கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் இந்தியாவிலுள்ள கல்வெட்டுகளில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், அரமேயம் போன்ற மொழிகள் காணப்படுகின்றனவே தவிர சமஸ்கிருதம் காணப்படவில்லை.
- சமஸ்கிருதம் மக்களின் பேச்சுமொழியாக இருந்ததில்லை.
‘சமஸ்கிருதம்’
என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது’ அல்லது ‘செம்மை செய்யப்பட்டது’ என்பது பொருள்.
“எனவே
கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளின் தொடக்கக்காலத்தில் இந்தியாவில் இருந்த இந்திய
மொழிகளாகிய தமிழ், பாலி, அர்த்தமாகதி மற்றும் அயல்மொழிகளாகிய பாரசீகம், கிரேக்கம்,
இலத்தீன், அரமேயம் ஆகிய மொழிகளைக் கலந்து உருவாக்கிய மொழியே சமஸ்கிருதம்”
“நாட்டில்
பல்வேறு மொழி பேசுவோர்க்கும் வேதாந்தக் கருத்தினைப் பரப்புவதற்காக அறிஞர்களால் உருவாக்கப்பட்டதே
சமஸ்கிருத மொழி. இந்தியாவில் அப்போது வழக்கத்தில் இருந்த சமணர்களின் மொழியாகிய
அர்த்தமாகதி, பெளத்தர்களின் மொழியாகிய பாலி, திராவிட மொழிகளின் மூல மொழியாகிய தமிழ்,
இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் மொழியாகிய பாரசீகம், இலத்தீன், அரமேயம்
மற்றும் கிரேக்க மொழிகள் போன்றவற்றின் கலப்பு மொழியாக – சமயக் குறியீட்டு மொழியாக உருவாக்கப்பட்டதே
சமஸ்கிருதம். எனவே இது செயற்கை மொழியே அன்றி இயற்கை மொழி அன்று” (இந்தியா தோமாவழி
திராவிடக் கிறிஸ்தவ நாடே… எவ்வாறு? தெ. தேவகலா).
இவ்வாறு
பல்வேறு மொழி பேசுகிறவர்களுக்கு உயரிய கருத்துகளை போதிப்பதற்காக, நம் அறிஞரால் உருவாக்கப்பட்ட
மொழியாகிய சமஸ்கிருதம், தமிழ் மட்டுமே பேசுகின்ற தமிழர்கள் வாழ்கின்ற தமிழகத்துக் கோயில்களில்
வழிபாட்டு மொழியாக இருப்பது அர்த்தமற்ற மூடத்தனமான செயல். இது குறித்து தமிழ்
மக்களும் கவலை கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. மக்களுக்கு ஒன்றும் புரியாத,
தங்களுக்கும் சரியாக அர்த்தம் விளங்காத மந்திரங்களை ஓதிக்கொண்டு, வழிபட வருகின்ற மக்களுக்கும்
கடவுளுக்கும் தடைச்சுவராக இருந்து கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிற பிராமண அர்ச்சகர்கள்
கோவில்களை விட்டு விரைவில் வெளியேற்றப்பட வேண்டும். தமிழில் அர்ச்சகர் பயிற்சி
பெற்றவர்கள் ஆலயங்களுக்குள் சென்று அர்ச்சனை செய்திட தமிழர்கள் எல்லோரும் விழிப்புணர்வு
கொண்டு வழி ஏற்படுத்த வேண்டும்.
ஆண்டுகளாக
ஆரியர் செய்துவருகின்ற தீர்ப்புகள், புனைவுகள் இவற்றைக் கண்டறிந்து உண்மையை நிலைநாட்டும்
விதமாக, இன்று நடுநிலையான ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.
இவ்வுண்மைகளை அறிந்து நமது இலக்கியத்திலும் மெய்யியல் கோட்பாடுகளிலும் புகுத்தப்பட்டுள்ள
போலிகள், குழறுபடிகளை நீக்கித் தமிழர் சமயத்தையும் தமிழர் ஆன்மவியலையும் ஆரியப் பிடியிலிருந்து
மீட்டெடுக்க வேண்டியது கற்றறிந்த தமிழ்ச்சான்றோரின் தலையாயக் கடமையாகும்.
(கட்டுரை:
தமிழர் சமயம் ஜூன் 2011 இதழில் வெளியானது)
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
20:21
0
கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


குறிச்சொல்
அர்ச்சகர்,
எழிலரசி,
சமற்கிருதம்,
தமிழர் ஆன்மவியல்,
தமிழர் சமயம்,
பிராமணர்
21.6.11
தமிழ் நாட்டைத் தமிழர் அல்லாத அந்நியர் ஆளுவது ஏன்?
நீங்கள் தமிழரா?
தெலுங்கு நாட்டைத் தெலுங்கர்கள் ஆளுகிறார்கள். மலையாள நாட்டை மலையாளிகள் ஆளுகிறார்கள். கன்னட நாட்டைக் கன்னடர்கள் ஆளுகிறார்கள். ஆனால்
தெலுங்கு நாட்டைத் தெலுங்கர்கள் ஆளுகிறார்கள். மலையாள நாட்டை மலையாளிகள் ஆளுகிறார்கள். கன்னட நாட்டைக் கன்னடர்கள் ஆளுகிறார்கள். ஆனால்
தமிழ் நாட்டைத்
தமிழர் அல்லாத அந்நியர் ஆளுவது ஏன்?
![]() |
தமிழரல்லாத அந்நியர் |
இப்பொழுது தமிழ்
நாட்டை, தமிழரல்லாத கன்னடப் பிராமணப் பெண்மணி செல்வி ஜெயலலிதா ஆளுகின்றார்.
எதிர்க்கட்சித்
தலைவராக தெலுங்கராகிய விஜயகாந்த் இருக்கின்றார்.
தெலுங்கராகிய
விஜயகாந்துக்கு அடுத்த நிலையில், தெலுங்கர் எனக் கூறப்படுவதை மறுக்காத கலைஞர் இருக்கின்றார்.
கலைஞர் கட்சிக்கு
அடுத்த நிலையில் தெலுங்கராகிய வைகோ இருக்கின்றார்.
ஆனால், தமிழ்
நாட்டு ஆட்சியில் தமிழருக்கு இடம் இல்லையே, ஏன்? தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்து
தமிழர் நிலங்களையும் வீடுகளையும் கைப்பற்றி, தமிழர்களை நசுக்கி, இழிவுபடுத்தி ஆண்ட
அந்நியர், தமிழ் நாட்டில் சகல வசதிகளோடும் தங்கி இருக்கின்றனர்.
நடப்பது மக்கள்
ஆட்சி. அதிலும் தமிழ் நாட்டைத் தமிழ் மக்களே ஆட்சி செய்யுமாறு இந்திய இறையாண்மை, மொழி
வழி மாநிலமாகப் பிரித்து, தமிழ்நாட்டைத் தமிழ் மக்களிடம் ஒப்படைத்திருக்கிறது.
மக்கள் ஆட்சி
நடைபெறும் இந்தியாவில், தமிழ் மக்கள் மிக மிக அதிகமாக வாழுகின்ற தமிழ் நாட்டை தமிழரல்லாத
அந்நியர் ஆளுகின்றார்கள் என்றால் குறை கூறப் பட வேண்டியவர்கள் தமிழ் மக்களே என்பது
வெளிப்படை. இதற்குக் காரணம் என்ன?
தமிழர்களுக்குள்
ஒற்றுமை இல்லை. ஏன் ஒற்றுமை இல்லை? தமிழ் மக்களில் மூன்று பிரிவினரை நாம் பார்க்கின்றோம்.
அப்பிரிவுகள் 1. முன்னேறியவர்கள் 2. பிற்படுத்தப்பட்டவர்கள் 3. தாழ்த்தப்பட்டவர்கள்.
1. தமிழ் இனத்தையும்,
தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் சமயத்தையும் அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்தவர்கள், இலங்கையில் அமைச்சர் பதவி வகிக்கும் கருணாவையும்
டக்லஸ் தேவானந்தாவையும் போன்று, தமிழ் இனத்தில் முன்னேறிய பிரிவில் இருக்கின்றார்கள்.
2. இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்னும்
நிலையில் வாழ்ந்த பொது மக்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்றார்கள்.
3. சிங்களர்களை
எதிர்த்துப் போராடியவர்களும் அவர்களைச் சார்ந்தோரும்
இன்று முள்வேலியில் அடைக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்களே, அதைப் போன்று, அந்நியர்களை
எதிர்த்துப் போராடிய பரம்பரையினர் தாழ்த்தப்பட்டவர் பிரிவில் இருக்கின்றார்கள்.
இந்த மூன்று
பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவும், மேலும் பல பிரிவுகளாகிய சாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதனால், தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டுவிடாதபடி, அந்நியர்கள், சாதிப் பிரிவுகளைப்
பயன்படுத்தி, தமிழர்களைப் பிளவுபடுத்தி அடக்கி ஆட்சி செய்து வருகின்றார்கள்.
இதனால் காட்டிக்
கொடுத்த பரம்பரையினர் தமிழர்களில் தங்களை மேல் சாதி என்று பெருமை கொள்ளும் இழி நிலையும்,
அந்நியர்களை எதிர்த்த பரம்பரையினர் தமிழர்களில், இழிசாதியினர் என இழிவுபடுத்தப்படும்
கொடுமையும் நடந்து வருகின்றன.
இதைச் சரிப்படுத்தாமல்
தமிழ் இன ஒற்றுமையை உருவாக்க முடியாது. அந்நியர் ஆட்சியை நீக்க முடியாது என்பது தெளிவு.
இந்த சாதி ஏற்றத்தாழ்வுக்
கொள்கை மதத்தின் பெயரால், மக்கள் உள்ளத்தில் புகுத்தப்பட்டுள்ளமையால், மக்களை விடுவிக்க
முயன்ற தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்காரும், பிறப்பால் வரும் சாதியின் பெயரால்
நம்மை இழிவுபடுத்துகின்ற மதத்தை வெறுக்கவும், வேறு மதத்திற்கு மாறவும் கற்றுக் கொடுத்தார்கள்.
இவர்கள் இருவரும்
வாழ்ந்த காலத்தில் ''இந்துத்துவா’’ என்னும் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை வேறு; ''தமிழர்
சமயம்’’ என்னும் இந்து மதம் வேறு என்னும் ஆராய்ச்சிக் கருத்துகள் வெளியே வரவில்லை.
'இந்து மதம்’
என்பது நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த மாளிகை. அந்த மாளிகைக்குள் ''இந்துத்துவா’’
என்னும் கொடிய பாம்புகள் குடியேறியுள்ளன. பாம்புகளுக்குப் பயந்து மாளிகையின் மீது கல்லெறிவதோ,
மாளிகையைப் பாம்புகளுக்குக் கொடுத்து விட்டு நாம் வெளியேறுவதோ தேவை இல்லை; பாம்புகளைப்
பிடித்து பாம்புப் பண்ணைக்கோ, அல்லது காட்டிற்கோ அனுப்பிவிட்டு மாளிகையைச் சுத்தப்படுத்தி,
நாம் குடியேறுவதே இன்று அவசியமாகிறது என்பதை அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு
உறுதி செய்து அதற்காகப் போராடி வருகிறது.
'இந்து மதம்’
என்பது தமிழ் இன மக்களின் வேத நூலாகிய 'தமிழ் மறை’ எனப்படும் திருக்குறளின் வழி, தமிழ்நாட்டில்
பக்தி இயக்கமாகத் தோன்றி, சைவம், வைணவம் என்னும் இருபிரிவாக வளர்ந்துள்ள தமிழர் சமயம்
ஆகும். தமிழர் சமயத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான புதுப் பெயரே இந்து
மதம் (Hindu Religion) என்பது வரலாறு.
'இந்துத்துவா’ என்பது ஒரு மதம் அல்ல
என்பதும் ஆரியவர்த்தத்தில் உருவாக்கப்பட்ட சட்ட நூலாகிய மனுநூல் கொள்கை என்பதும், அது
சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையைக் கூறுவது என்பதும், மனுநூல் கொள்கைக்கு ஆங்கிலேயர் கொடுத்த
புதுப்பெயரே 'இந்துத்துவா’ (Hindutwa) என்பதும் வரலாறு.
ஆகவே, இந்துத்துவாவாகிய
சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குப் பயந்து, தமிழர் சமயமாகிய இந்து மதத்தை வெறுக்கவோ,
கைவிட்டு மதம் மாறுவதோ தேவை இல்லை என்பதும், ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைவரையும் ஒன்றிணைக்கும்
உலகின் மிகச் சிறந்த தமிழர் ஆன்மவியல் (Soulology) இந்து மதமாகிய தமிழர் சமயத்தைக்
கூறும் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதையும் உணர்ந்து, அதன் சிறப்புகளை உலகம் முழுவதும்
பரப்ப வேண்டும் என்பதும் இப்பொழுது வலியுறுத்தப்படுகிறது.
சிந்து வெளித்
தமிழர்களின் புனிதமான சிவலிங்க வழிபாட்டிலிருந்து தோன்றியவையே உலக மதங்கள் அனைத்தும்
என்பது இப்பொழுது ஆராய்ச்சியில் வெளி வந்துள்ள வரலாற்று உண்மையாகும்.
இதனால் உலக
சமயங்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு பொதுப் பெயராக ''தமிழர் சமயம்’’ என்னும் பெயர்
இருக்கிறது. இதனால் தமிழர் சமயத்தின் அடிப்படைக் கொள்கையாக ''ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’
என்பது விளங்குகிறது. திருமந்திரத்தை எழுதியுள்ள திருமூலரின் இந்த வாக்கை, தந்தை பெரியார்
பேசிய நாத்திகக் கொள்கையிலிருந்து மாறுபட்ட, தமிழராகிய அறிஞர் அண்ணா, தாம் உருவாக்கிய
தி.மு.கவின் அடிப்படை ஆன்மீகக் கொள்கையாக அறிவித்தார்.
தி.மு.க வை
உருவாக்கிய தமிழராகிய அறிஞர் அண்ணா அறிவித்த தமிழர் ஆன்மீகக் கொள்கை, இன்று தமிழரல்லாதார்
தலைமையிலுள்ள திராவிட அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இக் கொள்கைக்குப்
புத்துயிர் கொடுக்க வேண்டிய கடமை தமிழர் ஆன்மீகத்தை அறிந்த தன்மானத் தமிழர்களின் மீது
இருக்கிறது.
''உலகின் முதல்
மொழி தமிழ்’’ என்பதை இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பைபிளின் தொடக்கநூல்
(ஆதி 11: 1-2) விளக்கிக் கொண்டிருக்கிறது.
உலக ஆன்மீகச்
சிந்தனையின் தொகுப்பாக இருக்கும் தமிழர் சமயத்தின் மணிமுடியாக விளங்குவது தமிழர் ஆன்மவியல்.
தமிழர் ஆன்மவியலைக் கூறும் நூல் சிவஞானபோதம். இது உடல், உயிர், ஆன்மா, கடவுள், ஆணவம்
ஆகிய ஐந்தையும் அறிவியல் வழியில் விளக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், ''தமிழர் ஆன்மவியலை
அறியாத நிலையே 'கடவுள் இல்லை’ எனக் கூறுகிறவரின் நிலை’’ என்பது இப்பொழுது வெளிப்பட்டுள்ளது.
மேலும் கடவுளை
அறியாமலும், தம்முடைய நீண்ட வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்காமலும் பணம் ஒன்றையே
குறிக்கோளாகக் கொண்டு, அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய உலகிற்கு, தமிழர்
ஆன்மவியலைப் பற்றிய அறிவு இன்றியமையாததாகும்.
தமிழ்மொழியின் சிறப்பும் தமிழர் ஆன்மவியலின் சிறப்பும் இன்று மறைந்து கிடக்கின்றன. இவற்றை உலகம் அறிந்து பயன்பெற தமிழர்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்பதை உணர வேண்டும்.
தமிழ்மொழியின் சிறப்பும் தமிழர் ஆன்மவியலின் சிறப்பும் இன்று மறைந்து கிடக்கின்றன. இவற்றை உலகம் அறிந்து பயன்பெற தமிழர்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்பதை உணர வேண்டும்.
- அனைத்துத்
தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
22:44
8
கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


குறிச்சொல்
அந்நியர்,
தமிழர் ஆன்மவியல்,
தமிழர் சமயம்,
தமிழினம்,
தன்மானத்தமிழர் கூட்டமைப்பு
19.6.11
''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்” என்னும் கோரிக்கை நியாயமானதா? இந்திய இறையாண்மைக்கு ஏற்றதா?
"தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்" என்னும் கோணத்தில் எங்களைச் சிந்திக்கத் தூண்டியது இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பு ஆகும். இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பை, தாய்த் தமிழக மக்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. காரணம் தமிழ் இனத்திற்காக உருகுவதாக நடித்த அந்நியர்களின் தலைமையில் ஒன்றிணைந்த தமிழக அரசியல் கட்சிகள் ஆகும். பதவி விலகுவதாக அறிவித்தபடி யாரும் பதவி விலகவில்லை. இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டமைக்குக் காரணம் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் நடிப்பு என்பதை உலகம் அறிந்தது."
நீங்கள் தன்மானத் தமிழரா?
இந்தியா 1947இல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை. இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.
இந்தியா 1947இல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை. இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.
'இந்தியாவை
இந்தியர்களே ஆள வேண்டும்’
என்பதும்
'தமிழ் நாட்டைத்
தமிழர்களே ஆள வேண்டும்’
என்பதும்
இந்திய இறையாண்மை
தமிழ் இனத்திற்குக் கொடுத்துள்ள உரிமையாகும். இந்த நிலையில் ''தமிழ் நாட்டைத் தமிழர்களே
ஆள வேண்டும்” என்னும் கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக் குரல் எழுப்புகிறவர்கள்
தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத, தமிழர்க்கு எதிரான அந்நியர்கள் ஆவர்.
இந்தியாவை வெள்ளையர்
ஆளுவதற்கு முன்னர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்த தமிழரல்லாத அந்நியர்கள், தமிழ்
நாட்டில் பெற்ற அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.
இந்தியா விடுதலையடைந்தவுடன்
வெள்ளையராகிய வெளிநாட்டினரை இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டோம். ஆனால், தமிழ் நாட்டின்
மீது படை எடுத்து வந்து, தமிழ் இனத்தை அடக்கி, நசுக்கி, இழிவுபடுத்தி ஆண்ட தமிழரல்லாத
அந்நியர் வெளியேற்றப்படவில்லை. இதனால், தமிழரல்லாத அந்நியர் தமிழ் நாட்டை ஆளும் நிலை
உருவாகியுள்ளது. மேலும், தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று கோருவது இந்திய இறையாண்மைக்கு
எதிரானது என்பது போன்ற மாயத் தோற்றத்தை இந்த அந்நியர்கள் உருவாக்கி வருகின்றனர்.
இந்தியாவின்
மருமகளாகிய சோனியாகாந்தி இந்தியப் பிரதமராக ஆகும்படித் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவை
ஆள முற்பட்டபொழுது, 'வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவை ஆளக் கூடாது; இந்தியாவை இந்தியரே
ஆள வேண்டும்’ என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது. அப்பொழுது, சோனியாகாந்தி கட்சிக்குத்
தலைமை தாங்கிக் கொண்டு, ஆட்சித் தலைமைக்கு ஓர் இந்தியருக்கு இடம் கொடுத்தார். அதைப்
போன்று, தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாதார் தமிழரை ஆள விரும்பாமல், அவருடைய கட்சியைச்
சேர்ந்த தமிழரை ஆட்சியில் அமர்த்திவிட்டு, கட்சிக்குத் தலைமை தாங்கவேண்டும். இதை விரும்பாதவர்,
தமிழ் இனத்தை அடிமைப்படுத்தி அழிக்க விரும்பும் அந்நியர் ஆவார் என்பதில் ஐயம் இல்லை.
தன்மானத் தமிழர்கள் அத்தகைய கட்சியில் இருக்கமாட்டார்கள்.
இந்தியா பல
மொழி பேசும் மாநிலங்களாக இருக்கின்ற காரணத்தால், மற்ற மாநிலங்களில் தமிழர் அமைச்சராக்கப்பட்டிருந்தால்,
அந்த மாநிலத்தவர் இங்கும், அங்குள்ள எண்ணிக்கைக்கேற்ப அமைச்சராக்கப்படலாம். தமிழ்நாட்டில்
இந்த நிலை இதுவரை எண்ணிப்பார்க்கப்படவில்லை. இதன் காரணமாகவே
தமிழ் இனம்
அந்நியர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. அழிந்து கொண்டிருக்கும்
தமிழ் இனம்-தமிழ்
மொழி-தமிழர் பண்பாடு-தமிழர் சமயம்
அழிக்கப்படாமல்
பாதுகாக்கப்பட, தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்தக் காலத்தில்
எழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதனால் தமிழர் அல்லாதவர் தமிழ் இனத்தை
ஆளுவது தமிழ் இனத்திற்கு இழிவு ஆவதுடன், அழிவையும் கொடுப்பது ஆகும்.
'இந்தியாவை
இந்தியரே ஆள வேண்டும்’
என்பதும், அதைப்
போன்று
'தமிழ் நாட்டைத்
தமிழரே ஆளவேண்டும்’
என்பதும்,
நியாயமானதும்
இந்திய இறையாண்மைக்கு ஏற்றதும் தமிழர்களின் அடிப்படை உரிமையுமாகும்.
இதைக் குறை
கூறுவோர் தமிழ் இனத்தை அடக்கி ஆள விரும்பும் அந்நியரும் அந்நியர்களின் கைக் கூலிகளுமேயாவர்.
இதனால் தமிழ் இனத்தை அடக்கி, இழிவுபடுத்தி, அழிக்க விரும்பும் அந்நியர்களிடமிருந்து
தமிழ் நாட்டை விடுவிக்க வேண்டிய பிறவிக் கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள தன்மானத் தமிழர்
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இது இந்திய இறையாண்மை தமிழ் இன மக்களுக்குக் கொடுத்துள்ள
உரிமையாகும். இதனால் கட்சிக்குத் தலைமை தாங்குவதுடன் ஆட்சிக்கும் தலைமை தாங்க விரும்பும்
அந்நியர்களின் தலைமையிலுள்ள கட்சிகளில் தன்மானத்
தமிழர் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம்.
போராட்ட வரலாறு
இந்தக் கோணத்தில்
எங்களைச் சிந்திக்கத் தூண்டியது இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பு ஆகும். இலங்கையில்
நடந்த தமிழ் இன அழிப்பை, தாய்த் தமிழக மக்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. காரணம்
தமிழ் இனத்திற்காக உருகுவதாக நடித்த அந்நியர்களின் தலைமையில் ஒன்றிணைந்த தமிழக அரசியல்
கட்சிகள் ஆகும். பதவி விலகுவதாக அறிவித்தபடி யாரும் பதவி விலகவில்லை. இலங்கையில் தமிழ்
இனம் அழிக்கப்பட்டமைக்குக் காரணம் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழக அரசியல் கட்சிகளின்
நடிப்பு என்பதை உலகம் அறிந்தது.
இந்த நிலையில்
அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு தன்னால் இயன்றதைச் செய்ய எண்ணியது.
1. முதலாவதாக, 2011 சட்டமன்றத் தேர்தலின் போது 234
வேட்பாளர்களில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து, எங்களைப் போன்றே கைதான
46 வேட்பாளர்களுக்காக, அவர்களுடைய கட்சி, அணி இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் 7 பேர் கொண்ட ஆன்மீக அணி தமிழ் நாடு முழுவதும் பயணமாகி
தேர்தல் பரப்புரையை நிகழ்த்தியது.
2. இரண்டாவதாக, வாக்களிப்பு முடிந்து, தேர்தல் முடிவுகள்
வெளிவருவதற்கு முன்னர் 30-4-2011 அன்று ''தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்” என்னும்
தலைப்பில் நீதிமன்ற ஆணையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
3. மூன்றாவதாக, கடிதங்களின் வழி நாம் விடுத்த வேண்டுகோளை
ஏற்றுக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் முதல்வராக தமிழரல்லாதவர் 16-5-2011இல் பதவி ஏற்ற போது,
தம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தும் தமிழர் சமய மௌனப் பிரார்த்தனை ஊர்வலம் நடத்த முயன்று
கைது செய்யப்பட்டது.
4. நான்காவதாக, 16.6.2011 அன்று காவல்துறையின் அனுமதியுடன்,
தமிழ் நாட்டைத் தமிழரே ஆள, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி, தமிழர் சமய - பிரார்த்தனை - போராட்டம் நடத்தப்பட்டது.
5. 2011 ஜூலை 16 சனிக்கிழமை பகல் 12 முதல் 1 மணி வரை தமிழர் சமய-பிரார்த்தனை-போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு அருகில் நடைபெறுகிறது.
தமிழக முதல்வராக தமிழர் ஒருவர் பதவி ஏற்கும் வரை ஒவ்வொரு மாதமும் அந்நியர் பதவி ஏற்ற 16ஆம் தேதி பகல் 12 முதல் 1 மணி வரை நம்முடைய தமிழர் சமய - பிரார்த்தனை போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் பங்கு கொள்ள விரும்பும் தன்மானத் தமிழர் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம். முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பிரார்த்தனையில் பங்கு பெறுகின்றார்கள். இது பிரார்த்தனை - போராட்டம் அமைதியாக ஆன்மீக நிலையில் நடைபெறத் துணை புரிகிறது.
நீங்கள் தன்மானத் தமிழரா?
தொடர்பு முகவரி:
பேராசிரியர்
முனைவர் மு, தெய்வநாயகம்
ஒருங்கிணைப்பாளர்,
அனைத்துத் தன்மானத்
தமிழர்களின் கூட்டமைப்பு,
278, கொன்னூர்
நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை-23.
04426743842;
9840003842 ; 9444817394
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
19:06
1 கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


குறிச்சொல்
அந்நியர்,
தமிழர்,
தமிழர் சமயம்,
தமிழ் இனம்,
தமிழ் மண்,
தமிழ்நாடு,
தெய்வநாயகம்,
பண்பாடு
17.6.11
நரியின் சாயம் வெளுத்துப் போச்சு டும், டும், டும்…. - அருட்சகோதரி எழிலரசி
காட்டில் வசித்து வந்த நரி ஒருநாள் தன் இரையைத் தேடி நீண்ட தொலைவு சென்றது. அங்கே மக்கள் வசிக்கும் குடியிருப்பிற்கு அருகே ஒரு கட்டடத்திற்கு வர்ணம் பூசுவதற்காகத் தொட்டியில் வர்ணம் கரைத்து வைக்கப்பட்டிருந்தது. தொட்டியின் மீது ஏறி அதனை உற்றுப் பார்த்த நரி தவறுதலாகத் தொட்டிக்குள் விழுந்தது. நரி வெளியே வந்த போது அதன் நிறம் மாறிப் போய் இருந்தது. மீண்டும் நரி காட்டுக்குள் சென்ற போது மற்ற விலங்குகள், ஏதோ புதிய மிருகம் வந்திருக்கிறது எனப் பயந்து ஓடின. இதைக் கண்ட நரிக்குப் பெருமையாக இருந்தது. அதற்கு ஆணவம் தலைக்கு ஏறியது. மற்ற விலங்குகள் நம்மைக் கண்டு பயப்படுகின்றன. இனி நமக்கு யோகம் தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாமே இந்தக் காட்டிற்கு ராஜாவாகி விடலாம் எனக் கனவு கண்டது. மற்ற விலங்குகள் சிரமப்பட்டு வேட்டையாடித் தேடிய உணவை தன் அதிகாரத்தால் கவர்ந்து உண்டு சோம்பேறித்தனமாக வாழ்வைக் கழித்தது.
பிறவிக்குணம்
தன்னையறியாமல் வெளிப்படும் அல்லவா? நரியும் தன்னையறியாமல் ஒரு நாள் ஊளையிட்டு
விட்டது. நரியின் முகத்திரை கிழிந்தது. மற்ற விலங்குகளுக்கு இத்தனை நாட்களும்
தங்களை ஏமாற்றியது நரி தான் என்பது புரிந்து விட்டது.
இது
போதாது என்று அன்று, மேகம் கருத்து மழை பொழிய ஆரம்பித்தது. அவ்வளவுதான் அந்த
மழையில் நரியின் சாயம் முற்றிலும் கரைந்து அதன் உண்மை உருவம் வெளிப்பட்டது. இத்தனை
நாட்களும் தன்னைவிடப் பெரிய விலங்குகளை எல்லாம் தன் புதிய நிறத்தால் ஏமாற்றி வந்த நரியின்
கதி அதோ கதியானது.
இந்த
நரியின் கதையைப் போன்றது தான் வந்தேறிகளான ஆரியரின் கதையும்.
குமரிக்கண்டத்தில்
தோன்றிய மாந்த இனம் படிப்படியாகப் பூவுலகம் முழுவதும் பரவிச் சென்று குடியேறியது.
குளிர்ப்பகுதியில் சென்று குடியேறிய மனிதன் தோல் நிறம் வெளுத்து வெள்ளை நிறம் பெற்றான்.
அவன் மீண்டும் தமிழ் நிலத்திற்கு வந்த போது தன்னைக் கண்டு வியந்த மாந்தர் நடுவில் தன்னை
மிக உயர்ந்தவனாகக் காட்டிக்கொண்டான்.
ஆரியர்
இந்நிலையைத் தமக்கு நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள பல நரித் தந்திரங்களை மேற்கொண்டனர்.
தமிழ் இனத்தை அடிமைப்படுத்தினர். தமிழ் மொழியையும் இலக்கியங்களையும் பண்பாட்டையும்
அழித்தும் திரித்தும் சிதைத்தும் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர். தொன்மை
வாய்ந்த நம் தமிழர் சமயத்தைப் பொய்யான கட்டுக்கதைகளாலும் வெற்றுப் புனைந்துரைகளாலும்
உருவிழக்கச் செய்துள்ளனர். நம் சமயக் கொள்கைகளுக்குள் சாதிப் பாகுபாடுகளைப் புகுத்தித்
தங்களை உயர்ந்த நிலையில் நிறுத்திக் கொண்டு தமிழினத்தை அடிமைப்படுத்தி நிரந்தரமாக ஆதிக்கம்
செலுத்த நினைத்தனர். இக்கதையினை உதாரணம் காட்டி மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
தமது ‘தமிழர் மதம்’ என்ற நூலில் ‘பிராமணன் நிலத்தேவனா?’ என்ற தலைப்பில் பின்வருமாறு
கூறியுள்ளார்.
“கதை(யில்)
வரும் நீலநரி, தான் நீலத்தொட்டிக்குள் விழுந்து நீலநிறம் பெற்றதனாயிலேயே, அரிமாவும்
வரிமாவும் கரிமாவும் போன்ற வன்மா விலங்குகளையும் ஏமாற்றி அடக்கியாண்டது போன்றே, வேதப்
பிராமணனும் குளிர்நாட்டு வாழ்க்கையாற் பெற்ற தன் வெண்ணிறத்தைத் துணை கொண்டு தான் நிலத்தேவன்
என்று தமிழரையும் திராவிடரையும் ஏமாற்றி அடக்கியாண்டார். உலக
வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் இல்லாத பண்டைக்காலத்தில் பழங்குடிப் பேதைமையும் மதப்
பித்தமும் கொடை மடமுங் கொண்ட மூவேந்தரையும் பலவகையில் வயப்படுத்தி அவர் வாயிலாகப் பொதுமக்களிடைப்
பிராமணியத்தைப் புகுத்தினர் ஆரியர்..”
“ஆரியர்
வருமுன்பே, தனித்தமிழ் மறைநூல்களும் மந்திர நூல்களும் குமரிநாட்டில் தோன்றியிருந்தன.”
(தமிழர்
மதம் – மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்)
-தொடரும்
(கட்டுரை: தமிழர் சமயம் சூன் 2011 இதழில் வெளியானது. மொழி நடை மாற்றாமல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது)
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
08:22
0
கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


குறிச்சொல்
ஆரியர்,
எழிலரசி,
தமிழர்,
தமிழர் மதம்,
பாவாணர்,
பிராமணியம்,
வந்தேறி
16.6.11
“தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்” - தமிழர் சமயப் பிரார்த்தனை போராட்டம்
“தமிழ்நாட்டைத்
தமிழரே ஆள வேண்டும்”
என்று கோரி அனைத்துத் தன்மானத்
தமிழர் கூட்டமைப்பு நடத்தும் தமிழர் சமயப் பிரார்த்தனை – போராட்டம்
நாள்: 16.06.2011, வியாழன் பகல்
12 – 1 வரை
இடம்: பனகல் மாளிகை முன்பு, சைதாப்பேட்டை,
சென்னை.
தலைமை: முனைவர் மு.தெய்வநாயகம்,
ஒருங்கிணைப்பாளர், அனைத்துத்
தன்மானத் தமிழர் கூட்டமைப்பு
முன்னிலை:
1. திருமிகு ஆனூர் ஜெகதீசன், வெளியீட்டாளர்,
புரட்சி பெரியார் முழக்கம்
2. அறிஞர் அருகோ, ஆசிரியர், எழுகதிர்
3. திருமிகு கிருஷ்ண பறையனார், ஆசிரியர்,
மக்களுக்கான நீதி என்ன
4. மருத்துவர் மு. அக்பர், ஆசிரியர்,
அறிவு தீபம்
பிரார்த்தனையை
முன்னின்று நடத்துவோர்:
1. அருள்தந்தை அமல்ராஜ் அடிகளார்
2. சைவ அர்ச்சகர் சு. சீனிவாசன்
3. பாஸ்டர் G.J. லூர்துசாமி
4. வைணவ அர்ச்சகர் திருவேங்கட இராமாநுஜ
தாசன்
5. அருள்சகோதரி கிரேஸ் ரெஜினா
6. மானமிகு கி.தேவர்பிரான்
பிரார்த்தனை பாடல்: திருமிகு A.P.தனபாலன்
பிரார்த்தனை
நிறைவு –நன்றியுரை:
முனைவர் தெ.தேவகலா
பதிவேற்றம்
பகுத்தறிவு
நேரம்
08:16
1 கருத்துகள்
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest


குறிச்சொல்
தமிழர்,
தமிழர் சமயம்,
தமிழ்,
தெய்வநாயகம்